கோவையில் பணத்திற்காக இளைஞர் கொலை : திருநங்கை உட்பட 5 பேர் கைது

கோவை : கோவை ரயில் நிலையம் அருகே பணத்திற்காக இளைஞரை கொலை செய்த வழக்கில் திருநங்கை உட்பட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை : கோவை ரயில் நிலையம் அருகே பணத்திற்காக இளைஞரை கொலை செய்த வழக்கில் திருநங்கை உட்பட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை ரயில் நிலையம் அருகில் லங்கா கார்னர் பாலத்தின் புதர் பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் உடல் கடந்த 15 -ம் தேதி நிர்வாண நிலையில் கிடந்தது. இதையடுத்து, போலீசார் அவரது உடலை சோதனை செய்ததில் இவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் சட்டம்-ஒழுங்கு டாகடர்.பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், உதவி ஆணையாளர் தலைமையில் ஆய்வாளர்கள் ராஜவேல், தேவேந்திரன், ராஜேஷ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் விரைவாக செயல்பட்டனர். 

இதையடுத்து, தனிப்படையினர் நடத்திய விசாரணையில் இறந்த நபர் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த கார்த்திக் (30), என்பதும் இவர் கூலி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், இவருக்கும் திருநங்கையான ஜெனிபர் என்பவருக்கும் தவறான உறவு இருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில், கார்த்திக் இறந்ததிலிருந்து ஜெனிபர் தலைமறைவாகியிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த தனிப்படை போலிசார் ஜெனிபரை தீவிரமாக தேடி வந்தனர். 

இதையடுத்து, ஜெனிபரை கைது செய்து போலீசார் விசாரணை செய்ததில், அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கார்திக்கை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், அவர் கொடுத்த தகவலின் பேரில் தேவகோட்டையை சேர்ந்த செந்தில் (25), உக்கடத்தை சேர்ந்த முகமது (36), கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜேஷ் (20), போத்தனூரை சேர்ந்த அன்சார் (26), ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில், இந்த கும்பல் இரவு நேரங்களில் பேருந்து நிறுத்தங்களில் இருக்கும் இளைஞர்களை மயக்கி உல்லாசத்துக்கு அழைத்து பணம் பறிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. அதேபோல, கொலை செய்யப்பட்ட கார்த்திக், ஜெனிபருடன் உல்லாசமாக இருந்து விட்டு பணம் கொடுக்காததால் அவரை கொலை செய்ததாகவும் குற்றவாளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...