நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பருவ மழை குறைந்ததால் நீர்மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் முக்கிய அணைகளாக அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை உள்ளிட்ட 12 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரைக் கொண்டு அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பைக்காரா உள்ளிட்ட நீர் மின்நிலையங்களில் தினசரி 834 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், மின் உற்பத்தி செய்யப்பட்டு உபரியாகச் செல்லும் தண்ணீர் குந்தா, கெத்தை, பரளி மற்றும் பவானி வழியாக விவசாயம் உள்ளிட்ட பிற தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரியில் உள்ள மின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு அங்கு பெய்யும் பருவமழையே முக்கிய காரணமாகும். ஆனால், கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் பருவமழை ஓரளவு தான் பெய்தது. இதன் காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயரவில்லை.

அப்பர்பவானி அணையின் மொத்த நீர்மட்டம் 210 அடி. ஆனால், தற்போது அணையில் 130 அடி தான் தண்ணீர் உள்ளது. இதற்கு அணைக்கு போதிய அளவு நீர்வரத்து இல்லாததே காரணம் ஆகும். இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. சில மாதங்களில் கோடை காலம் தொடங்க உள்ளதால் அப்பர்பவானி அணையில் மின் உற்பத்தி மேலும், பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.