தொண்டாமுத்தூரில் ரூ.6 கோடி செலவிலான புதிய துணை மின்நிலையம் திறப்பு

கோவை : தொண்டாமுத்தூரில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய துணை மின்நிலையத்தினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை : தொண்டாமுத்தூரில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய துணை மின்நிலையத்தினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.



 

கோவை மாவட்டம் பேரூர் வட்டம் தொண்டாமுத்தூரில் நேற்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் புதிய மின்நிலைய திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு, ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய துணை மின்நிலையத்தினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தொண்டாமுத்தூர் பகுதிக்கு மாதம்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து இரண்டு எண்ணிக்கையிலான 11 கிலோவாட் மின் பாதைகளின் மூலமாகவும், தேவராயபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து இரண்டு எண்ணிக்கையிலான 11 கிலோ வாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. 

மேலும், மின் தேவை அதிகரித்து வருவதாலும், மின் இழப்பு மற்றும் மின் அழுத்தம் குறைபாடுகளை சீர் செய்யும் நோக்கில், தொண்டாமுத்தூரில் ரூபாய்.6 கோடி மதிப்பீட்டில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம், தொண்டாமுத்தூர் மற்றும் தாளியூர் நகரப்பஞ்சாயத்திற்குட்பட்ட கெம்பனூர், முத்திபாளையம், குளத்துப்பாளையம், தீனம்பாளையம், புதுப்பாளையம் கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர் மற்றும் சுண்டபாளையம் போன்ற கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சீரான மின் அழுத்தத்தில் மின்சாரம் வழங்கிட இயலும். 

இப்பகுதியில் புதிய துணை மின்நிலையம் அமைப்பதால் ஆண்டுக்கு 31.56 லட்சம் யூனிட்டுகள் மின் இழப்பைக் குறைக்கப்படுவதால் இதன் மூலம் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு தோராயமாக ஆண்டுக்குள் 1.95 கோடி வரை சேகரிக்கப்படும் முடியும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...