கோவை : தொண்டாமுத்தூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை, ஆடுகள் மற்றும் கோழிகளை வேட்டையாடிய சம்பவம் கிராம மக்களை பீதியடையச் செய்தது.

தொண்டாமுத்தூரையடுத்த பூளுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி. இவர், ஆடு மற்றும் கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை அவரது பண்ணைக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, 5 ஆடுகள் மற்றும் கோழிகளை வேட்டையாடிச் சென்றுள்ளது. வழக்கம் போல, பெரியசாமி பண்ணைக்கு சென்ற போது, சிறுத்தை கடித்துக் குதறியதில், அந்தப் பகுதி முழுவதும் ரத்தமாகக் காணப்பட்டது.
இது குறித்து தகவலறிந்து வந்த மதுக்கரை வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கால்நடைகளை வேட்டையாடிய விலங்கு சிறுத்தை என்பதை உறுதி செய்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது அக்கிராம மக்களை பீதியடையச் செய்துள்ளது.