கோவை : நொய்யல் ஆற்றை மறுசீரமைப்பதற்கான டெண்டரை கோர விரும்பும் ஒப்பந்ததாரர்கள், திட்ட அறிக்கையை கோவை மாநகராட்சியிடம் சமர்பிக்க வரும் 21-ம் தேதி கடைசிநாளாகும்.
கோவை : நொய்யல் ஆற்றை மறுசீரமைப்பதற்கான டெண்டரை கோர விரும்பும் ஒப்பந்ததாரர்கள், திட்ட அறிக்கையை கோவை மாநகராட்சியிடம் சமர்பிக்க வரும் 21-ம் தேதி கடைசிநாளாகும்.
ஸ்மார்சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் உள்ள நீர்நிலைகள் மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவையின் முக்கிய ஆறான நொய்யல் ஆற்றை, மறுசீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கோவை மாநகர் வழியாக பாய்ந்தோடும்படி நொய்யல் ஆற்றை சீரமைக்கும் மாபெரும் திட்ட அறிக்கையை சமர்பிக்க வரும் 21-ம் தேதி கடைசி நாளாகும். திட்டத்தின் தொகை மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், நொய்யல் ஆற்றை சீரமைப்பதற்கான ஒப்பந்ததாரரை தேர்வு செய்யப்பட உள்ளனர்.
டெண்டரை பெறும் ஒப்பந்ததாரர், நொய்யல் ஆற்றை மறுசீரமைப்பதற்கான காலஅவகாசம் 120 நாட்களாக இருக்க வேண்டும். திட்டப் பணிகள் குறித்து விரிவாக அறிக்கையை 180 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஆற்றை சீரமைக்கும் அனைத்துப் பணிகள் பற்றிய தகவல்களையும் இடம்பெறச் செய்திருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, கரைகளைப் பலப்படுத்துதல், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், ஆற்றின் சுற்றுப்பகுதியில், நடைபாதை மற்றும் சைக்கிள் பயணம் செய்யும் வகையிலான பாதை அமைக்க வேண்டும்.