பந்தலூரில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை 24 மணிநேரமும் கண்காணிக்கும் வனத்துறை

நீலகிரி : பந்தலுார் அருகே காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், 24 மணிநேரமும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி : பந்தலுார் அருகே காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், 24 மணிநேரமும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே தேவாலா வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் அத்திமாநகர், அத்திக்குன்னா கிராமங்கள் அமைந்துள்ளன. அதில், அத்திமாநகர் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் சாலையோர புதரில் முகாமிடும் இந்த யானைக் கூட்டங்கள், இரவு 7 மணிக்கு மேல் சாலையை கடந்து எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பை ஒட்டிய நீராதாரங்களில் முகாமிடுகின்றன.



இவை எந்த நேரத்திலும் சாலைக்கு வரலாம் என்பதால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதால், வனச்சரகர் தலைமையில் வனக்காப்பாளர் மற்றும் யானை கண்காணிப்பு குழுவினர் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். யானைகள் சாலையை கடக்கும் நேரத்தில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, யானைகள் சாலையைக் கடந்த பின்னர் அனுமதிக்கப்படுகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...