நீலகிரி : கோத்தகிரியில் 4 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், குழந்தையைக் கொன்றதற்கான காரணத்தை தாய் பரபரப்பு வாக்குமூலமாக அளித்துள்ளார்.

கோத்தகிரி அருகே உள்ள எம் கைகாட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சஜிதா. இவர்களுக்கு சுபாஷினி (15), அர்சினி (4) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். பிரபாகரன் கடந்த 5 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். சஜிதா கண்ணேறிமுக்கு என்ற இடத்தில் ஒரு தனியார் விடுதியில் பணி செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் மற்றும் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் தனது 4 வயது குழந்தை அர்சினியைக் காணவில்லை என சஜிதா போலீசில் புகார் கொடுத்தார். இந்த நிலையில், சஜிதா வேலை செய்யும் தங்கும் விடுதியின் கிணற்றில் அர்சினி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து, கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சஜிதாவை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது :- கணவன் இறந்ததால் 2 குழந்தைகளையும் வளர்க்க முடியவில்லை. கடன் லட்சக்கணக்கில் ஆகியது. எப்படி குடும்பத்தை நடத்துவது என்றே தெரியாத நிலையில், குடிப்பழக்கத்துக்கு ஆளானேன். யாரும் எனக்கு உதவி செய்யவில்லை. விரக்தி ஏற்பட்டது. ஒரு குழந்தையையாவது நல்ல வளர்க்கலாம் என்று நான் பெற்ற குழந்தையை கிணற்றில் வீசினேன், என்றார்.
இதையடுத்து, போலீசார் சஜிதாவை கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.