கணவன் - மனைவி இடையே கல்வித்தகுதியில் முரண்பாடு : திருமணமாகிய 2 மாதங்களில் மனைவி தற்கொலை

கோவை : தொண்டாமுத்தூர் அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கல்வித்தகுதி முரண்பாட்டால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவை : தொண்டாமுத்தூர் அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கல்வித்தகுதி முரண்பாட்டால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவை சுண்டம்பாளையம். கலிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த நவீன்குமார் (29) என்பவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சவுந்தர்யா (23) சிவில் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது முதலே, கணவன் - மனைவிக்குள் கல்வித்தகுதி குறித்த மனக்கசப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், பொங்கல் விழாவையொட்டி சவுந்தர்யா தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். இப்படியிருக்க நேற்று மாலை அவர் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், வந்த தொண்டாமுத்தூர் போலீசார் சவுந்தர்யாவின் பிரேதத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர்.

கணவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதால், அதிருப்தியில் மனமுடைந்து சவுந்தர்யா தற்கொலை செய்து இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். திருமணமாகி 2 மாதங்களே ஆனதால், ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...