கோவையில் வனங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரச்சாரப் பேரணி

கோவை : வனங்கள் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கோவையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி இன்று நடைபெற்றது.


கோவை : வனங்கள் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கோவையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி இன்று நடைபெற்றது.



 

விலங்குகள் நல அமைப்பு சார்பில் வனங்கள் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி நாடு முழுவதும் 50 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி நடைபெற்றது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்கள், பணிக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



வருமான வரித்துறை அலுவலகம் எதிரில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியில், மாணவர்கள், வனங்களின் பாதுகாப்பை உணர்த்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு சென்றனர்.



"தற்போது உள்ள வனங்களின் பரப்பளவு, அடுத்த 10 ஆண்டுகளில் இருக்குமா என்று கூறமுடியாது. நமது மற்றும் நமது வாரிசுகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வனங்களைப் பாதுகாக்க வேண்டும்," என்றார் விலங்குகள் நல அமைப்பின் திட்ட மேலாளர் அல்போன்ஷா சேவியர். 

 

இந்த விழிப்புணர்வு பேரணியைத் தொடர்ந்து, தன்னார்வலர்கள் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...