தந்தங்களால் தனித்தன்மை பெற்ற புதுச்சேரி கோவில் யானை : மேட்டுப்பாளையம் முகாமில் பார்வையாளர்களை கவரும் யானை லட்சுமி

கோவை : தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாமில் பெண் யானைகள் மட்டுமே பங்கேற்றுள்ள நிலையில், புதுச்சேரி கோவில் யானை, ஆண் யானைகளைப் போன்று நீண்ட தந்தங்களுடன் தனித்தன்மையுடன் காட்சியளிக்கின்றது.

கோவை : தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாமில் பெண் யானைகள் மட்டுமே பங்கேற்றுள்ள நிலையில், புதுச்சேரி கோவில் யானை, ஆண் யானைகளைப் போன்று நீண்ட தந்தங்களுடன் தனித்தன்மையுடன் காட்சியளிக்கின்றது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானியாற்று கரையோரப்பகுதியான தேக்கம்பட்டி என்னுமிடத்தில் தமிழக அரசு சார்பில் கோவில் யானைகளுக்கான நலவாழ்வு புத்துணர்வு முகாம் கடந்த மாதம் 14 தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் 30 தேதி வரை 48 நாட்கள் நடைபெறவுள்ள இம்முகாமில் தமிழகத்தில் இருந்து 26 யானைகளும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து இரண்டு யானைகளும் பங்கேற்றுள்ளன. இதில், லட்சுமி என்ற பெண் யானை மட்டும் பிற யானைகளிடம் இருந்து வேறுபட்டு தந்தங்களுடன் காட்சியளிக்கின்றது. 

கேரள கோவில்களில் ஆண் யானைகள் வளர்க்கப்படும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள கோவில்களில், பெண் யானைகள் மட்டுமே வளர்க்கப்பட்டு, கோவில் திருப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. ஆண் யானைகள் நீண்ட தந்தங்களுடன் காணப்படும். பொதுவாக, பெண் யானைகளுக்கு தந்தங்கள் இருக்காது. யானைகள் ஆணா..? பெண்ணா..? என்பதை எளிதில் கண்டறிய இதுவே குறியீடாகும். 

ஆண் யானைகளின் தாடைப்பகுதியில் வளரும் நீண்ட இரு பற்களே வளர்ந்து தந்தங்களாக காட்சியளிக்கும். பெண் யானைகளுக்கும் இதுபோன்று தந்தங்கள் வளர்ந்தாலும், இவை வெளியில் தெரியாத வகையில், மிகமிக சிறிதாக இருக்கும். ஆண் யானைகளைப் போல தும்பிக்கையை தாண்டி நீண்ட தந்தங்கள் பெண் யானைகளுக்கு வளர்வதில்லை. 

ஆனால், ஆசிய யானைகளுக்கான இந்த இயற்கை பொதுவிதியை தாண்டிக் காட்சியளிக்கின்றது புதுச்சேரி மாநில மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி.

இந்தப் பெண் யானைக்கு, ஆண் யானைகள் போல நீண்ட தந்தங்கள் வளர்ந்து காணப்படுகிறது. பெண் யானைகளுக்கு தந்தங்கள் இருப்பது அபூர்வமானது. மிக அரிதாக சில பெண் யானைகளுக்கே இதுபோன்று தந்தங்கள் இருக்கும் என்கின்றனர் யானைப்பாகன்கள். இம்முகாமில் உள்ள 27 பெண் யானைகளும், அதன் இயல்புப்படி தந்தங்கள் இன்றி காணப்படுகையில், இந்த லட்சுமி யானை மட்டும் பிற யானைகளிடம் இருந்து வேறுபட்டு நீண்ட தந்தங்களோடு தனித்து காட்சியளிக்கின்றது.



கோவிலில் தன் அருகில் வரும் பக்தர்கள் யாரையும் மிரட்டாமல் அனைவருடனும் அன்பாக பழகக் கூடியது லட்சுமி யானை என்பதோடு, இதன் முகவடிவம் விநாயகர் விக்ரகங்களில் உள்ள முக பாவத்தோடு மிக சரியாக ஒத்துப் போவதாகவும் தெரிவிக்கின்றார் இதன் பாகன். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...