கோவை : பணியிட மாறுதலை ஏற்றுக் கொண்டு பிரிக்கால் தொழிற்சங்கத்தினரை மீண்டும் பணிக்கு திரும்ப ஆவண செய்யுமாறு கோவை மாவட்ட ஆட்சியரிடம் பிரிக்கால் நிர்வாகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- பிரிக்கால் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 144 பேருக்கு நிர்வாகம் பகுதி கதவடைப்பு செய்துள்ளது. 2018-ம் ஆண்டு தொழிலாளர்கள் பலருக்கு பணப்பிடிப்பு மற்றும் இதர தண்டனைகளை வழங்கியுள்ளது. பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கமானது, அனைத்திந்திய தொழிற்சங்கங்களின் மத்திய ஆணையத்தில் (AICCTU) பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, சி.பி.ஐ.(எம்.எல்) கூட்டமைப்பிலும் இணைந்துள்ளது.
இந்த தொழிற்சங்கமானது, நிறுவனத்தில் சில சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, தீபாவளிப் பண்டிகையின் போது, ஆர்டர்கள் அதிகளவில் இருக்கும். இதனை தெரிந்து கொண்டுள்ள தொழிற்சங்கத்தினர், நிர்வாகத்தினருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் 100 நாட்களை கடந்தது. தொடர் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தங்களது நிறுவனம் ஸ்திர நிலைத் தன்மையை இழந்தது. இதனால், ஆர்டர்கள் குறைந்துள்ளது.
இந்த விவகாரம் தொழிலாளர் நல வாரியத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தொழிலாளர் துறை, பிரிக்கால் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியிலே முடிந்தது. இருப்பினும், ஒருசிலர் நிறுவனத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு பணிக்கு திரும்பி விட்டனர். மேலும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை பணியில் அமர்த்தவும் பிரிக்கால் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், ஆர்டர்கள் குறைவினாலும், வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொண்டு பணிக்கு வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் கோவையில் உள்ள தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு வழங்க இயலாத சூழல் நிலவி வருவதாக பிரிக்கால் நிர்வாகம் தெரிவித்தது. எனவே, ஊழியர்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டிய பொறுப்பு, வேலை இழப்பைத் தவிர்த்தல், சமுதாய அமைதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கோவை அல்லாத இதர பகுதிகளில் செயல்படும் தங்களது தொழிற்சாலைளிலும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, 152 ஊழியர்கள் கோவை பெரியநாயக்கன் பாளையம் யூனிட்டிலும், எஞ்சியவர்கள் கோவையை தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள யூனிட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, 47 ஊழியர்கள் சென்னையில் உள்ள ஸ்ரீசிட்டி யூனிட்டுக்கும், 118 ஊழியர்கள் புனே யூனிட்டுக்கும், 137 பேர் உத்தரகாண்ட் யூனிட்டுக்கும் மாற்றப்பட்டனர்.
ஒருசில ஊழியர்கள் இந்த பணியிட மாறுதலை ஏற்றுக் கொண்டு, அந்தந்த கிளை நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத தொழிற்சங்கத்தினர், கோவை செயல்பட்டு வரும் யூனிட்டிற்கு, மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்து, நிறுவனத்தை மூடப்போவதாக துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர். இதனால், நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யவும், எங்களது நிறுவனத்திற்குள்ள வியாபார நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மட்டுமே நிர்வாகம் தற்காலிகமாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதனை உணர்ந்து தொழிற்சங்கத்தினருக்கு உரிய அறிவுரை வழங்கி, நிறுவனத்திற்கு ஏற்படும் கூடுதல் நஷ்டங்களை தவிர்க்க, சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்ட இடத்தில் சென்று உடனடியாக பணிக்கு சேர ஆவண செய்ய வேண்டும், இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.