கோடநாடு சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை : திருப்பூரில் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

திருப்பூர் : கோடநாடு சம்பவங்களை அம்பலப்படுத்தியது எதிர்க்கட்சிகள் அல்ல என்றும், அரசியல் சாராத தெஹல்கா நிறுவனம் என்பதால், உண்மையை வெளிக்கொண்டுவர சி.பி.ஐ. விசாரணை தேவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

திருப்பூர் : கோடநாடு சம்பவங்களை அம்பலப்படுத்தியது எதிர்க்கட்சிகள் அல்ல என்றும், அரசியல் சாராத தெஹல்கா நிறுவனம் என்பதால், உண்மையை வெளிக்கொண்டுவர சி.பி.ஐ. விசாரணை தேவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

நவம்பர் 19-ம் தேதி தியாகிகள் தினம் நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகளால் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, திருப்பூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தோற்கடித்து, மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைப்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் யுக்தியாகும். 

கோடநாடு விவகாரத்தில் நடைபெற்ற சம்பவங்கள் ஹாலிவுட் பட திரில்லர் போல நடைபெற்றுள்ளதை விசாரிக்க காவல் புலனாய்வுத்துறை விசாரணை போதாது. மத்திய புலனாய்வுத்துறை, சி.பி.ஐ., விசாரணை தேவை. 

சி.பி.ஐ., நீதிமன்றங்களைப் பா.ஜ.க. மோடி அரசு தன் வசப்படுத்த முயற்சிக்கும் போதும் கூட, சி.பி.ஐ.,யால் உண்மை நிலையைக் கொண்டுவர முடியும் என்பதால் அந்த கோரிக்கையினை முன்வைக்கிறேன். 

விசாரணை முடியும் வரை முதலமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியிருக்க வேண்டும். கோடநாடு விவகாரத்தில் சம்பவங்களை அம்பலப்படுத்தியது கம்யூனிஸ்ட் கட்சிகளோ, எதிர்கட்சிகளோ அல்ல. எந்த அமைப்பையும் சாரதா தெஹல்கா என்னும் பத்திரிக்கை நிறுவனம் என்பதால், அதன் உண்மை நிலையைக் கொண்டுவர எதிர்கட்சிகள் கோரிக்கை வைக்கிறேன்," என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...