திருப்பூர் அரசு கல்லூரி மரக்கன்றுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு : கருகிய மரக்கன்றுகளை கண்டு ஆசிரியர் மயக்கம்

திருப்பூர் : அரசு கல்லூரியில் மரக்கன்றுகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்ததால், சேதமடைந்த மரக்கன்றுகளை கண்ட ஆசிரியர் மூச்சு திணறியதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


திருப்பூர் : அரசு கல்லூரியில் மரக்கன்றுகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்ததால், சேதமடைந்த மரக்கன்றுகளை கண்ட ஆசிரியர் மூச்சு திணறியதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 



திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள் அலகு 2 -ன் சார்பில் கல்லூரி வளாகத்தில் 1000 -க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. கலாம் பூங்கா என்ற பெயரில் கடந்த மூன்று ஆண்டுகளாக பராமரிக்கப்பட்ட அனைத்து மக்கன்றுகளும் 4 முதல் 9 அடி வரையிலும் மரமாக வளர்ந்து வரும் நிலையில் இருந்தது. இந்நிலையில், நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் இந்த பூங்காவிற்கு தீ வைத்துள்ளனர். 

இந்த சம்பவத்தில் மர்மநபர்களால் 100 -க்கும் மேற்பட்ட மரங்கள் எரிந்து கருகியுள்ளது. இன்று காலை வனவிலங்குகள் பாதுகாப்பு வார விழாவிற்காக வருகை தந்த மாணவர்கள் மரங்கள் எரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தங்கள் ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த உயிரியல் ஆசிரியரும், நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 -ன் ஆசிரியருமான மோகன் எரிந்து கருகிய மரங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுததுடன் அதே இடத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். 



இதனையடுத்து, அவரை மீட்ட மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தாங்கள் ஆசையாக வளர்த்த மரங்களை எரித்து சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...