கோவை : மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து கோவை மாநகராட்சி இணையத்தில் வெளியிட வேண்டும் என, பொது தகவல் அலுவலர் கோவை மாவட்ட கமிஷனருக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மாதம் ஒருமுறை அல்லது இருமுறை கூட்டப்பட்டு, மக்கள் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் அதில் இயற்றப்படும். தற்போது உள்ளாட்சி நிர்வாகிகள் இல்லாததால் மாநகராட்சி கமிஷனர் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மக்களின் பார்வைக்காக மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டு வந்தன.ஆனால், கடந்த ஒன்றரை வருடங்களாக நடைபெற்ற மாமன்ற கூட்டத்தின் தீர்மானங்கள் எதுவும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.
இதனால், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மர்மமாகவே இருந்து வருகிறது. எனவே, சமூக ஆர்வலர் எஸ். பி. தியாகராஜன் என்பவர், கடந்த 2018 -ம் ஆண்டு மார்ச் மாதம் 24 -ம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ‘கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் 2017 -ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2018 -ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தனி அலுவலரின் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான பொருள்களின் அட்டவணை நகல்களை வழங்குமாறு மாநகராட்சி மாமன்ற செயலாளர் பதவியில் உள்ள பொது தகவல் அலுவலரிடம் கேட்டுள்ளார்.
கோவை பொது தகவல் அலுவலர், கோவை மாநகராட்சியிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20 -ம் தேதியின் போதே தகவல்கள் அனைத்தையும் இணையத்தில் வெளியிடக் கோரி உத்தரவிட்டது. இதற்கு கோவை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்கும் போது, "இணையத்தில் கூட்டத்தில் நடைபெற்ற தீர்மானங்களை இணையத்தில் அப்டேட் செய்யும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. சென்னையை தவிர அனைத்து மாநகராட்சிகளும் 'அர்பன் ட்ரீ இன்பார்மேஷன் சிஸ்டம்' என்ற நகர்ப்புற தகவல் அமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த காரணமாகவே, தீர்மானங்கள் குறித்த தகவல்களைப் பதிவேற்றுவதில் தாமதமாகிறது," என்றார்.
இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் காரணங்கள் எதுவும் ஏற்கொள்ளப்படாத நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 30 -ம் தேதி, திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் 2018 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 -ம் தேதிக்குள் கோவை மாநகராட்சியிடம் தீர்மானங்கள் குறித்த விபரங்களை உடனடியாக வெளியிடக் கோரி பொது தகவல் அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு வந்து 4 மாதங்கள் ஆகியும், மாமன்ற தீர்மானங்கள் குறித்த எந்த அப்டேட்டும் கோவை மாநகராட்சி இணையப் பக்கங்களில் வெளியாகவில்லை.
இதையடுத்து, சமூக ஆர்வலர் எஸ்.பி. தியாகராஜன் மீண்டும் பொது தகவல் அலுவலருக்கு மின்அஞ்சல் ஒன்றினை அனுப்பியுள்ளார். இதையடுத்து, கோவை, மாநகராட்சி மாமன்ற செயலாளர் பதவியில் உள்ள பொது தகவல் அலுவலர், கோவை மாநகராட்சி ஆணையருக்கு இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த அறிக்கையை வெளியிடக்கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து தியாகராஜன் கூறுகையில், "கடந்த ஒன்றரை வருடங்களாக மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படும் எந்த தீர்மானங்களும் இணையத்தில் வெளியாகவில்லை. பொது தகவல் அலுவலர் ஆகஸ்ட் மாதம் இதற்கான ஆணையை வெளியிட்ட பின்பும் கூட, இன்றைய தேதி வரை கோவை மாநகராட்சி எந்த விபரங்களையும் வெளியிடவில்லை. இந்த முறையும் கோவை மாநகராட்சி பதிலளிக்காத பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுக்கவிருக்கிறோம்," என்றார்.