நீலகிரி : உதகை படகு இல்லத்தில் கிடைத்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி : உதகை படகு இல்லத்தில் கிடைத்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள படகு இல்லத்தில் பணிபுரிபவர்கள், ஒரு ஆண் சடலம் மிதப்பதாகக் காவல்துறைக்கு இன்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் படகு இல்லத்தில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டனர்.

இதையடுத்து, உதகை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு சுமார் 40 முதல் 45 வயது இருக்கலாம். சுற்றுலா வந்த இடத்தில் தவறி தண்ணீரில் விழுந்து இறந்தாரா, தற்கொலையா, அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா, என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.