பிரிக்கால் விவகாரம் : தொழிலாளர் துணை ஆணையரிடம் பிரிக்கால் தொழிலாளர் நல சங்கத்தினர் மனு

கோவை : கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தினர் கோரிக்கையின் படி, பிரிக்கால் நிறுவனத்தினை மூடப் போவதாக வெளியான தகவலையடுத்து, கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் நல சங்கத்தினர் தொழிலாளர் துணை ஆணையரிடம் மனு அளித்தனர்.


கோவை : கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தினர் கோரிக்கையின் படி, பிரிக்கால் நிறுவனத்தினை மூடப் போவதாக வெளியான தகவலையடுத்து, கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் நல சங்கத்தினர் தொழிலாளர் துணை ஆணையரிடம் மனு அளித்தனர். 

கோவை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏ.ஐ.டி.யு.சி உடன் இணைந்த பிரிக்கால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுமார் 800 -க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்தின் மாற்றுச் சங்கமாக, கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இந்த சங்கத்திற்கு எதிராக, கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் நல சங்கத்தினர் மனு ஒன்றினை தொழிலாளர் துணை ஆணையரிடம் அளித்தனர். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது ;- கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கம், தொழிலாளர்கள் மத்தியில் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறது. அதனால், சுமார் 1500 ஒப்பந்த தொழிலாளர்கள், 800 யூனிட் தொழிலாளர்கள், 133 நிரந்தர தொழிலாளர்கள் பணியிழந்துள்ளனர். தற்போது 302 தொழிலாளர்களை இடமாற்றம் செய்வது குறித்து, தொழிலாளர் துணை ஆணையர் வழியாக மாவட்ட ஆட்சி தலைவர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக அறிகிறோம். 

302 தொழிலாளர்கள் பிரச்சினை உள்ளிட்ட அமைத்து பிரச்சினைகளையும் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து கொள்வதே எங்கள் விருப்பம். இந்நிலையில், கடந்த 8 -ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பிரிக்கால் நிறுவனத்திற்கு தண்ணீர் மற்றும் மின்சாரத்தைத் தடை செய்ய போவதாகவும், பிரிக்கால் நிறுவனத்திற்கு சீல் வைக்கப் போவதாகவும் முடிவெடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது. 

மேலும், மாவட்ட ஆட்சியரும், தாங்களும் (தொழிலாளர் துணை ஆணையர்) இணைந்து பிரச்சினைகளை பேசி தீர்க்காமல், தொழிற்சாலையை மூடுவதாகத் தெரிவித்திருப்பது, சுமார் 4000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். எனவே, மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம், எனச் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...