நீலகிரி : கோத்தகிரி அருகே தனியார் தங்கும் விடுதிக்கு சொந்தமான கிணற்றில் மர்மமான முறையில் குழந்தை இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

கோத்தகிரி அருகே உள்ள எம் கைகாட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சஜிதா. இவர்களுக்கு சுபாஷினி (15), அர்சினி (4) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். பிரபாகரன் கடந்த 5 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். சஜிதா கண்ணேறிமுக்கு என்ற இடத்தில் ஒரு தனியார் விடுதியில் பணி செய்து வருகிறார். இவருக்கு குடிபழக்கம் மற்றும் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் தனது 4 வயது குழந்தை அர்சினியைக் காணவில்லை என சஜிதா போலீசில் புகார் கொடுத்தார். இந்த நிலையில், சஜிதா வேலை செய்யும் தங்கும் விடுதியின் கிணற்றில் அர்சினி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து, கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சஜிதாவை பிடித்து விசாரித்து வருகின்றனர். சஜிதாவின் தகாத உறவுக்கு அர்சினி இடையூறாக இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா..? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.