கோவை : கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுக்கு ந்திரன்ஸ் யுவா'ஸ் அறக்கட்டளை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை : கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுக்கு சந்திரன்ஸ் யுவா'ஸ் அறக்கட்டளை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட பெண்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் திறமையைக் கண்டறிந்து, நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரும் வகையில் சந்திரன்ஸ் யுவா'ஸ் அறக்கட்டளை சார்பில் 'ரைஸ் டிரான்ஸ்ஃபார்மிங் லிவ்ஸ்' என்ற தலைப்பில் பெண்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.
கோவை மத்திய சிறை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏராளமான பெண் கைதிகள் கலந்து கொண்டு, பிளாஸ்டிக் மாற்றுப் பொருளாக துணிப் பைகள் தயாரித்தனர். தற்போது, பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிளாஸ்டிக் மாற்றுப் பொருளை அறிமுகப்படுத்த கோவை மாநகராட்சிக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியுடன் பெண் சிறை கைதிகளுடன் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட்டது.