குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில் புதிய கமாண்டன்ட் பதவியேற்பு

நீலகிரி: குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில் புதிய கமாண்டன்ட்டாக லெப்டினன்ட் ஜெனரல் மோகன் பதவியேற்றார்.

நீலகிரி: குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில் புதிய கமாண்டன்ட்டாக லெப்டினன்ட் ஜெனரல் மோகன் பதவியேற்றார். 

நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கல்லுாரியின் கமாண்டென்ட் லெப்டினன்ட் ஜெனரலாக பணியாற்றிய அம்ரிக் சிங் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த, லெப்., ஜெனரல் மோகன் புதிய கமாண்டன்ட்டாக பொறுப்பேற்றார். 



இதற்கான நிகழ்ச்சியில், லெப்டினன்ட் ஜெனரல் அம்ரிக் சிங் பங்கேற்று, ராணுவ முறைப்படி பணியை புதிய 'கமாண்டன்ட்'டிடம் ஒப்படைத்தார். கடந்த 37 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வரும் லெப்., ஜெனரல் மோகன், தேசிய பாதுகாப்பு அகாடமி, ராணுவ பயிற்சி கல்லுாரியில் பல்வேறு பொறுப்புகளில் ஏற்கனவே பணியாற்றியுள்ளார். 

மேலும், இவர் டில்லி தேசிய பாதுகாப்பு கல்லுாரி தலைமை பொறுப்பாளராகவும், நேபாளத்தில் இந்திய துாதகரகத்திலும் பணியாற்றியுள்ளார். மேலும், சியாச்சின் கிளேசியர், 9 -வது 'கார்ப்' படையிலும், எல்லை பகுதிகளிலும் பல்வேறு பிரிவுகளில் திறம்பட பணியாற்றியுள்ளார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...