தமிழக வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் : நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

கோவை : தமிழக வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்ற உளவு துறைக்கு கிடைத்துள்ள இரகசிய தகவலின் பேரில் நக்சல் தடுப்பு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை : தமிழக வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்ற உளவு துறைக்கு கிடைத்துள்ள இரகசிய தகவலின் பேரில் நக்சல் தடுப்பு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.



கேரள மாநிலம் மலப்புரம், வயநாடு, வன பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வயநாட்டை அடுத்த அட்டமலா பகுதிக்கு துப்பாக்கியுடன் வந்த மாவோயிஸ்ட்கள் பொதுமக்களிடம் உணவு வாங்கிச் சாப்பிட்டு, அவர்களிடம் பேசியுள்ளனர். மேலும், அவர்கள் தமிழ், ஆங்கிலம், மலையாளத்தில் எழுதிய நோட்டீஸ்களை ஒட்டி சென்றனர். இதில், நாடுகாணி கொரில்லா படை ராணுவம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



இதனையடுத்து, தமிழக எல்லை பகுதிகளான பில்லூர் டேம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட செம்பக்கரை, தூமனூர், கோபனாரி, குடப்பட்டி, வேப்பமரத்தூர், சுண்டப்பட்டி ஆகிய பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் குழுக்கலாக தண்ணீர் பள்ளம் முதல் முள்ளி ஆறுவரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால், 50 -க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் 30 மாவோயிஸ்ட்களின் போட்டோ அடங்கிய நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. இதையடுத்து, சந்தேகப்படும்படியான நபர்கள் கிராமங்களுக்கு வந்தாலும், வனத்தில் பதுங்கியிருந்தாலும் காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...