கோவை கல்யாண் ஜுவல்லர்ஸ் நகை கொள்ளை : சரணடைந்த இருவருக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்

கோவை : கோவையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் கடைக்கு சொந்தமான காரை மடக்கி நகை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 2 பேரை 6 நாட்கள் போலீஸ் காவல் வைக்க கோவை 7-வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : கோவையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் கடைக்கு சொந்தமான காரை மடக்கி நகை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 2 பேரை 6 நாட்கள் போலீஸ் காவல் வைக்க கோவை 7-வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 7-ம் தேதி கல்யாண் ஜூவல்லர்ஸின் ஊழியர்கள் திருச்சூரில் இருந்து கோவை காந்திபுரத்தில் உள்ள கிளைக்கு சுமார் 350 சவரன் தங்க நகையும், 243.320 கிராம் வெள்ளி பொருட்களையும் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது, காக்கா சாவடி அருகே திடீரென கல்யாண் ஜுவல்லரி பணியாளர்கள் வந்த காரை 10-க்கும் மேற்பட்டோருடன் வந்த கும்பல் கடத்திச் சென்றது. பின்னர், காருக்குள் இருந்த தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை எடுத்துக் கொண்டு காரை கோவையிலேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் கோவை மாவட்ட போலீசார், 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த சூழலில், கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 60 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி ஆபரணங்களை நேற்று திருப்பதி குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாய், மகனை கைது செய்யப்பட்டுள்ளனர். 



இந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், தமிழ்ச்செல்வன் ஆகிய இரண்டு பேர் சென்னையில் சரணடைந்தனர். அவர்களை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க க.க.சாவடி போலீசார், கோவை 7-வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாண்டி, ஜெயப்பிரகாஷ் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...