வரும் அக்டோபர் முதல் கோவை - சிங்கப்பூர் இடையே வாரத்திற்கு 5 விமானங்களை இயக்க முடிவு

கோவை : வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்திற்கு 5 விமானங்களை இயக்க சிங்கப்பூர் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கோவை : வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்திற்கு 5 விமானங்களை இயக்க சிங்கப்பூர் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

தற்போது, கோவை - சிங்கப்பூர் இடையிலான விமான சேவையை சில்க் ஏர் நிறுவனம் வழங்கி வருகிறது. இதற்கு பதிலாக, விமான சேவைகளை விரைந்து வழங்கும் வகையில், வரும் அக்டோபர் மாதம் முதல் குறைந்த கட்டணத்தைக் கொண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவைகளை வழங்க முன்வந்துள்ளது. 

இந்தியாவில் தங்களது சேவையை விரிவுபடுத்துவது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் அக்டோபர் 27-ம் தேதி முதல் சிங்கப்பூருக்கு விமான சேவை வழங்கப்பட இருக்கிறது. அதேவேளையில், திருவனந்தபுரத்தில் இருந்து மே மாதம் முதல் விமான சேவை தொடங்குகிறது. 

இந்த சேவையின் மூலம், அம்ர்தரஷ், பெங்களூரூ, சென்னை, ஐதராபாத், சென்னை, கொச்சி, லக்னோ மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் இயக்கப்படுகிறது. 

இந்த புதிய சேவையின் அறிமுக ஆஃபராக, கோவை, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் உள்பட நாடு முழுவதும் உள்ள நகரங்களில் இயக்கப்படும் தங்களது விமானங்களின், குறுகிய கால டிக்கெட் சலுகையை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சலுகை 14-ம் முதல் 28-ம் தேதி வரை மட்டுமே.

ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 27 நாடுகளின் நகரங்களுக்கான ஒருவழி பயணத்திற்கு மட்டும் அனைத்து வரிகளையும் உள்ளடக்கி, வெறும் ரூ. 4,500 மட்டுமே கட்டணம் என அறிவிக்கப்படுகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...