எதிர்க்கட்சியை காரணம் காட்டி, கோட நாடு விவகாரத்தை அ.தி.மு.க திசை திருப்ப பார்க்கிறது - சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

கோவை : கோடநாடு வீடியோ விவகாரத்தை எதிர்க்கட்சியைக் காரணம் காட்டி, அ.தி.மு.க திசை திருப்ப பார்க்கிறது என சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவை : கோடநாடு வீடியோ விவகாரத்தை எதிர்க்கட்சியைக் காரணம் காட்டி, அ.தி.மு.க திசை திருப்ப பார்க்கிறது என சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 



கோவை காந்திபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது :- சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஜனவரி 22 -ம் தேதி திருநெல்வேலி நிகழ்ச்சியிலும், 23 -ம் தேதி திருச்சியில் வி.சி.க நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். கேரளாவில், பிரதமர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காமல் பேசுவது வேதனையானது. எந்த அரசியல் சட்டம் மீது பிரமாணம் எடுத்து பதவி எடுத்து கொண்டாரோ, அதற்கு எதிராகப் பேசுவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். 

இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். கோடநாடு விவகாரத்தில் உண்டான பல மர்ம முடிச்சுகள் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கோடநாடு விவகாரம் தொடர்பாக பதிலளிக்காமல், எதிர்க்கருத்தை சொல்பவர்களைச் சட்ட வரம்பிற்கு மீறி கைது செய்வது நியாயமற்றது. முதல்வர் மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு வந்தபின் தன் மீது குற்றச்சாட்டு இல்லையென்றால், பதவி விலகி சி.பி.ஐ விசாரணைக்கு முதல்வர் தாமாக உத்தரவிட வேண்டுமே தவிர, உண்மையை மூடி மறைப்பதற்காகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. 

எதிர்க்கட்சியைக் காரணம் காட்டி, கோட நாடு விவகாரத்தை அதிமுக திசை திருப்ப பார்க்கிறது. மேத்யூ சாமுவேல் எந்த கட்சியை சார்ந்தவர்?, வழக்கில் சம்மந்தப்பட்ட சையன், மனோஜ் சொல்லும் குற்றச்சாட்டை கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, இவ்வாறு அவர் பேசினார். 

இதனைத் தொடந்து, சி.பி.எ.ம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், பாஜக, அதன் கூட்டணி கட்சிகளை தோற்கடிப்பதும், பாஜகவைத் தோற்கடித்த பிறகு மாற்று மதச்சார்பற்ற அரசு அமைக்க முடிவு எடுக்க வேண்டும் என்பதும் சி.பி.எம்., உடைய தேர்தல் முடிவு. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை பாஜக, திரிணாமுல் காங்கரஸை எதிர்த்துத் தான் தேர்தலில் நிற்க களமிறங்குவதால், நாளை மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கவில்லை, என்றார். 

அப்போது செய்தியாளர்கள் கேட்ட தி.மு.க ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பான கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தலில் நாடு தழுவிய ஒரே மாதிரி தேர்தல் கூட்டணி அமையப் போவதில்லை. மாநிலத்திற்கு மாநிலம் கூட்டணி மாறுபடும், என பதிலளித்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...