தேர்தலை முன்னிட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அரசு அதிகாரிகள் இடமாற்றம் : தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரியும் அரசு ஊழியர்களை, தேர்தலை முன்னிட்டு இடமாற்றம் செய்ய தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரியும் அரசு ஊழியர்களை, தேர்தலை முன்னிட்டு இடமாற்றம் செய்ய தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

நாடாளுமன்றம் மற்றும் 4 மாநிலங்களுக்குச் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. 

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது :- அதில் ஜூன் 3 -ம் தேதிக்குள் மக்களவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். ஆகையால், தேர்தலில் தோடர்புடைய அதிகாரிகள் சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்தால் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும். அதே போல், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அதிகாரிகளையும் மே 31 -ம் தேதிக்குள் 3 ஆண்டு பணி நிறைவடையும் அதிகாரிகளையும் இடமாற்றம் செய்ய வேண்டும். 

இந்த உத்தரவு தேர்தல் பணியுடன் நேரடி தொடர்புள்ள மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஐஜி, உதவி ஆய்வாளர் உள்ளிட்டோருக்குப் பொருந்தும். தேர்தல் பணியுடன் நேரடி தொடர்பு இல்லாத மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்குப் பொருந்தாது. இதன் மூலம், அதிகாரிகளைப் பணியிடம் மாற்றம் செய்யும் நடவடிக்கைகளை வரும் பிப்ரவரி 28 -ம் தேதிக்குள் முடித்து மார்ச் முதல் வாரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும், இவ்வாறு அந்த கடிதத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...