தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் மறுசுழற்சிக்கு அளிக்க வேண்டும் : கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை : தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் சேமித்து வைக்காமல் அந்தந்த மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


கோவை : தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் சேமித்து வைக்காமல் அந்தந்த மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் கூறியிருந்ததாவது :- தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 -ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவைக் கடந்த ஜூன் மாதம் 25 -ம் தேதி சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுக்காப்புத்துறை பிளாஸ்டிக் தடை உத்தரவை வெளியிட்டுள்ளது. ஆகையால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த வருடம் 23 -ம் தேதி ஆகஸ்ட் மாதம் தலைமைச் செயலகத்தில் 'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' உருவாக்கிட மாநில அளவில் பிரச்சாரத்தினை தொடங்கி வைக்கும் விதமாக, அதற்கான லச்சினையை அறிமுகம் செய்து வைத்தார். 

மேலும், பிரச்சாரத்திற்கான குறும்படம், இணையதளத்தையும் வெளியிட்டார். அப்போது, ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ பிரச்சாரத்தின் விளம்பரத் தூதுவராக திரைப்பட நடிகர் விவேக் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் இதர சங்கத்தினருடன் நவம்பர் 14 -ம் தேதி அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, கடந்த டிசம்பர் 25 -ம் தேதி துணை முதலமைச்சர் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் விழிப்புணர்வு கூட்டத்தினை நடத்தினார். இதையடுத்து, மாநிலமெங்கும் சுற்றுச்சூழல் கூட்டங்கள் மாவட்ட ஆட்சியரின் கீழ் நடைபெற்றது. பல்வேறு வகையான விழிப்புணர்வு பேரணிகளும் நடைபெற்றன. இந்த விழிப்புணர்வின் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி 10 -ம் தேதி பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரயை ஊர்தி சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார். 

இது போன்ற பல்வேறு விழிப்புணர்வை அரசு அளித்த போதும் மக்களின் ஆதரவு அதற்கு தேவைப்படுகிறது. எனவே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கண்ட இடங்களில் தூக்கி எறியாமல், அவற்றை உள்ளாட்சி அமைப்புகள் அல்லது பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் பிளாஸ்டிக் மாசுக்களை குறைக்க முடியும். 

எனவே, இது குறித்த தகவல்களை அறிந்து கொள்ள பின்வரும் வலைதளம் மற்றும் ஹெல்ப் லைனை தொடர்பு கொள்ளலாம். 

மாவட்ட தலைமை அலுவலகம் : 044- 22343153/ 8056042121, www.plasticpollutionfreetn.org, 8056042218 (கோவை தெற்கு), 8056042210 (கோவை வடக்கு), 0424-2675608 (மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், கோவை தெற்கு), 0422 -2444608 (மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், கோவை வடக்கு)இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...