உதகையில் மீண்டும் உறைபனி தாக்கம் அதிகரிப்பு : தோட்ட தொழிலாளர்கள் அவதி

நீலகிரி : உதகை சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரங்களில் அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், அதிகாலை பணிக்கு செல்லும் ஏராளமான கூலி தொழிலாளர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

நீலகிரி : உதகை சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரங்களில் அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், அதிகாலை பணிக்கு செல்லும் ஏராளமான கூலி தொழிலாளர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.



 

நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனி தாக்கம் அதிகளவில் காணப்படும். இந்த சமயங்களில், தேயிலை செடிகள், புல்வெளிகள், செடி, கொடிகள் கருகும். மேலும், கடும் குளிர் நிலவி, வெப்பநிலை நான்கு டிகிரிக்கும் குறைவாகச் செல்லும் வாய்ப்பு அதிகம். 

இந்நிலையில், இந்தாண்டு உறை பனியின் தாக்கம் ஜனவரி 1 -ம் தேதி முதல் சற்று அதிகமாகக் காணப்பட்டது. உதகை, குன்னூர், கேத்தி பள்ளத்தாக்கு, குந்தா, பூங்கா, பந்தைய மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி நிலவுகிறது. மேலும், பனியின் தாக்கத்தால் தேயிலை தோட்டங்கள், விளைநிலங்கள், புல்வெளிகள் போன்றவை வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் காணப்பட்டது. 

மேலும், தற்போது உதகையில் பகல் நேரங்களில் அதிக பட்சமாக18 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சமாக 6 டிகிரி செல்சியசும் வெப்ப நிலை காணப்படுகிறது. இதனால், அதிகாலை நேரத்தில் கேரட் அறுவடையில் ஈடுபடும் ஏராளமான கூலி தொழிலாளர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 



தற்போது, 9 மணிக்கு மேல் மட்டுமே தொழிலாளர்கள் கேரட் அறுவடைக்குச் செல்கின்றனர். வழக்கத்துக்கு அதிகமாக கடும் குளிர் நிலவுவதால், வாகன ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் பகல் நேரத்திலேயே நெருப்பூட்டி குளிர்காய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...