முதுமலை புலிகள் காப்பகத்தில் தானியங்கி கேமராக்கள் பொருத்தி புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்

நீலகிரி : முதுமலையில், 191 இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தி புலிகள் கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

நீலகிரி : முதுமலையில், 191 இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தி புலிகள் கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். 



நீலகிரி மாவட்டம், முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, நெலக்கோட்டை, மசினகுடி வனச் சரகங்களில், 191 இடங்களில், தலா இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் உதவியோடு புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது :- முதுமலையில், நடப்பு ஆண்டில் இரண்டு ச.கி.மீ., பரப்பளவுக்கு ஒரு இடம் வீதம், 191 இடங்களில் தலா இரண்டு கேமரா வைக்கப்பட்டுள்ளது. சுமார் 382 தானியங்கி கேமராக்களை புலிகள் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்தி வருகிறோம். 



இதையடுத்து, கேமராக்களில் பதிவாகும் படங்கள், காணொளிகள் 3 நாட்களுக்கு ஒருமுறை பதிவிறக்கம் செய்யப்படவுள்ளது. அதன் பின்பு அவைகள் ஆய்வு செய்யப்படும். இப்பகுதியைத் தொடர்ந்து முதுமலை வெளிவட்டம் பகுதியிலும், தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். இந்த கணக்கெடுப்பு பணிகள் முடிந்ததும் புலிகள் எண்ணிக்கையின் நிலை குறித்து தகவல் தெரிவிக்கப்படும், என்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...