கோவையில் 350 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திருப்பதியில் இருவர் கைது : ரூ.60 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்

கோவை : கோவை, பாலக்காடு சாலையில் உள்ள காக்காசாவடி அருகே 350 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக இரண்டு குற்றவாளிகளை திருப்பதி போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை : கோவை, பாலக்காடு சாலையில் உள்ள காக்காசாவடி அருகே 350 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக இரண்டு குற்றவாளிகளை திருப்பதி போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். 



கேரள மாநிலம் திருச்சூர் கல்யாண் ஜூவல்லர்ஸ் கிளையில் இருந்து, கோவையில் உள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் கிளைக்கு 350 பவுன் தங்க நகை, 243.320 கிராம் வெள்ளி நகை கடந்த 7 -ம் தேதி எடுத்து வரப்பட்டது. திருச்சூர் கிளையின் ஊழியர்கள் திருச்சூரை சேர்ந்த அர்ஜூன் (22), வில்பர்ட்(31,) ஆகியோர் நகையை எடுத்து வந்தனர். இந்நிலையில், காக்காசாவடி அருகே உள்ள ஆர்யாஸ் ஹோட்டல் அருகே வரும்பொழுது, திடீரென கல்யாண் ஜுவல்லரி பணியாளர்கள் வந்த காரின் பின்பகுதியில் இரண்டு கார்கள் மோதியது. 

இதையடுத்து, அதிலிருந்த 10 பேர் கொண்ட மர்மநபர்கள் குழு கல்யாண் ஜுவல்லரி நிறுவனத்தினர் வந்த கார் கண்ணாடியை உடைத்தனர். அதன் பின்பு அர்ஜூன் மற்றும் வில்பர்ட்டை தாக்கி, காரை கடத்திச் சென்றனர். அதற்கடுத்ததாக, காருக்குள் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை எடுத்துக்கொண்டு, அந்த காரை மட்டும் கோவையில் நிறுத்திவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். 

இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் திருடிச் சென்ற சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர, வெள்ளி ஆபரணங்களைத் திருப்பதி குற்றப்பிரிவு போலீசார் நேற்று பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல, இந்த வழிப்பறி கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாய், மகனைக் கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த நகைகளை திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரசூல் என்பவரின் மகன் பைரோஜ் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதேபோல, கொள்ளையடிக்கப்பட்ட ஆபரணங்களில் ஒரு சிலவற்றை தன்னுடைய கூட்டாளிகளுக்கு கொடுத்த பைரோஜ், ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஆபரணங்களை தன்னுடைய தாய் சமா, சகோதரர் அகமது சலீம் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார். 

மேலும், நகைகளை வீட்டில் வைத்திருந்தால் போலீசார் வந்து பறிமுதல் செய்து விடுவார்கள் என்று கருதிய சமா, அகமது சலீம் ஆகியோர் நகைகளுடன் சொந்த ஊரிலிருந்து வெளியேறி பல்வேறு ஊர்களுக்கு சுற்றித் திரிந்துள்ளனர். இப்படி சுற்றித் திரிந்தவர்கள் நேற்று திருப்பதி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் இன்று கோவை மாவட்ட போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...