ஊட்டியிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த மினி பேருந்து கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

கோவை : சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பொங்கல் விடுமுறையை கொண்டாடும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டி சென்றுள்ளனர்.


கோவை : சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பொங்கல் விடுமுறையை கொண்டாடும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டி சென்றுள்ளனர். 



இந்தநிலையில் இன்று காணும் பொங்கல் கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு  ஊட்டியிலிருந்து சென்னை  சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த மினி வேன் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கோத்தகிரி முதல் கொண்டை ஊசி வளைவில் வளையும் பொழுது எதிர்பாராதவிதமாக சுவற்றின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. 

இதையடுத்து சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைவாக வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பேருந்துக்குள் காயங்களுடன் இருந்த சுற்றுலா பயணிகளை, தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் மீட்டனர்.



பின்னர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் படுகாயமடைந்த சசிகுமார் 31, சுபா 24, குமார் 22,  ப்ரீத்தி 18, அம்மு 40, கவிதா 34, தட்சிணாமூர்த்தி 21, அபிநயா 14, அருள்குமார் 42, டிராவிட் 18, தனுஷ் 15, ஜோதிகா 16, ரவி 51, சரளா 40, ராஜா 48, ரவி 47, சங்கீதா 36, ஸ்ரீலதா 19, ஆகியோரை நான்கு 108 ஆம்புலன்ஸ்களில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். 



இங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொங்கல் கொண்டாட்டத்திற்காக சுற்றுலா பயணிகள் வந்த வாகனம் விபத்துக்குள்ளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...