மதுரை : உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 15 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் என்ற மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை : உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 15 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் என்ற மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், 1,400 காளைகளை அடக்குவதற்காக 800 மாடுபிடி வீரர்கள் களத்தில் தயாராக இருந்தனர். ஆனால், 729 காளைகளே களம் இறக்கப்பட்டன. அதே போன்று 697 வீரர்கள் விளையாட அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்கமறுத்த காளையின் உரிமையாளர்களுக்கும் ஏ.சி., வாஷிங் மெஷின், சைக்கிள், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இன்றைய போட்டியில் 15 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அறிவித்தபடி, அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, இதேபோன்று, களத்தில் நின்று விளையாடிய காளையின் உரிமையாளருக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது.