திருப்பூர் : தாராபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதிய விபத்தில் மூன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (62). இவர், அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். இவர், தனது மனைவி ஜோதிமணி, அவரது தந்தை நாச்சிமுத்து, மற்றும் மகள் அருணாவின் மகன் செல்வமித்திரனை அழைத்துக்கொண்டு, மற்றொரு மகளான சுகுணா வீட்டிற்கு காரில் பொங்கல் கொண்டாட சென்றுள்ளார்.
பின்னர், பண்டிகையை சிறப்பித்துவிட்டு, மீண்டும் தாராபுரம் திரும்பினர். கார் தாராபுரம் அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக முத்துச்சாமியின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், நாச்சிமுத்து, ஜோதிமணி மற்றும் குழந்தை செல்வமித்ரன் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முத்துச்சாமி பலத்த காயங்களுடன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனிடையே, விபத்து நடந்த இடத்திற்கு சென்ற போலீசார், மூவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.