பேட்ட படத்தை குடும்பம், குடும்பமாக வந்து பார்த்துச் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது : திருப்பூரில் கார்த்திக் சுப்புராஜ் பேட்டி

திருப்பூர் : பேட்ட திரைப்படத்தை பெண்கள், குழந்தைகள் என குடும்பம், குடும்பமாக பார்த்துச் செல்வது மகிழ்ச்சியளிப்பதாக அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்தார்.


திருப்பூர் : பேட்ட திரைப்படத்தை பெண்கள், குழந்தைகள் என குடும்பம், குடும்பமாக பார்த்துச் செல்வது மகிழ்ச்சியளிப்பதாக அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்தார். 

கடந்த 10-ம் தேதி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 'பேட்ட' திரைப்படம் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், திருப்பூரில் பேட்ட திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்கில் ரசிகர்களை பார்ப்பதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வருகை தந்திருந்தார். 



அப்போது, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தபின் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அவர் கூறியதாவது :- பேட்ட திரைப்படம் வெளியான பிறகு, நான் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தபோது, அவர் எனக்கு மகிழ்ச்சியை தெரிவித்தார். இந்தப் பொங்கலில் பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக படத்தை பார்த்துச் செல்வது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 

சமூக வலைதளங்களின் விமர்சனங்கள் இன்று முக்கியமாக இருக்கிறது. சமூக கருத்துக்களை படங்களில் வைத்ததனால் எந்தவித எதிர்ப்புகளும் இல்லை. மாறாக, நல்ல கருத்துக்களை வைத்துள்ளோம், என்றார். 

முன்னதாக, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை வரவேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம், "படம் வெளியாகி 11-வது நாளான ஞாயிற்றுக்கிழமையோடு, இத்திரைப்படம் ரூ. 100 கோடி வர்த்தகத்தை அடையும்," எனத் தெரிவித்தார்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...