கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் யானைகள் முகாமில், ஆண்டுதோறும் நடைபெறும் யானை பொங்கல் விழா இன்று விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல், தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வனப்பகுதியில் நடைபெறும் யானை பொங்கல் விழா அனைவரின் பார்வையை ஈர்க்கும் விதமாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தாண்டு டாப்சிலிப்பில் யானை பொங்கல் விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, முகாமில் உள்ள 18 யானைகள் வரிசையாக நிறுத்தப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது.

பின்னர், மலைவாழ் மக்கள் பொங்கல் வைத்தனர். பின்னர், யானைகளுக்கு கரும்பு, பழம், பொங்கல் ஆகியவை கொடுக்கப்பட்டது.

வித்தியாசமாக நடைபெறும் இந்த யானை பொங்கலை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.