விஸ்வாசம் தூக்குதுரைக்கு காவல்துறை துணை ஆணையர் பாராட்டு

கோவை : பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் விஸ்வாசம் படத்தைப் பார்த்த காவல்துறை அதிகாரி ஒருவர் வியந்து பாராட்டியுள்ளார்.

கோவை : பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் விஸ்வாசம் படத்தைப் பார்த்த காவல்துறை அதிகாரி ஒருவர் வியந்து பாராட்டியுள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம், கடந்த ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வந்தது. குடும்ப உறவுகளின் அவசியத்தைப் பேசும் விஸ்வாசம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில், படத்தைப் பார்த்த சென்னை காவல் துணை ஆணையர் சரவணன், படத்தை வியந்து பாராட்டியுள்ளார். படம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல், நடிப்பு, சண்டைக்காட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது, கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரைக் காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட, சீட் பெல்ட் அணிந்து செல்வது, பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது. 

இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடிக்கும் போது, அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது ஆசை. விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...