நீலகிரி : கூடலூரில் காட்டு யானை தாக்கியதில், மேலும் ஒரு தேயிலை தோட்டத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூடலூர் பந்தலூர் தாலுகா தாலுகா கண்ணம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர் ராஜேந்திரன். இவர் வழக்கம் போல, பணிக்குச் சென்ற நிலையில், யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், இது குறித்து அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 10-ம் தேதி அரசு தோட்ட தொழிலாளி பத்மநாபன் (56) யானை தாக்கி உயிரிழந்தார். கூடலூர் பகுதியில் ஒரே மாதத்தில் காட்டு யானை தாக்கி இரண்டு தோட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.