தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற சுமந்து செல்ல மாட்டோம் : கோவையில் துணை சபாநாயகர் தம்பிதுரை காட்டம்

கோவை : தமிழகத்தில் பா.ஜ.க.வை காலுன்ற அ.தி.மு.க.வினர் சுமந்து செல்ல மாட்டோம் என கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை காட்டமாக தெரிவித்துள்ளார்.


கோவை : தமிழகத்தில் பா.ஜ.க.வை காலுன்ற அ.தி.மு.க.வினர் சுமந்து செல்ல மாட்டோம் என கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை காட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, கோவை அண்ணாசிலை பகுதியில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் பேட்டியளித்ததாவது :- ஏழை மக்களுக்காக போராடி பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். கோடநாடு பிரச்சனை என்பது எதிர்கட்சிகளின் ஒரு புனையப்பட்ட நாடகம். தீர்ப்பு வருகின்ற நாளில் திசைதிருப்பும் வகையில், அரசியல் சதிக்காக தவறான செய்தி மூலம் பிளேக் மெயில் செய்கிறார்கள். இதில் எந்த உண்மையும் இல்லை.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றியை சீர்குலைக்க தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் முயற்சி எடுபடாது. தமிழக முதலமைச்சர் மீது அவதூறு கிளப்பும் கோடநாடு சதித்திட்டம் வெற்றி பெறாது. பஞ்சாயத்து தேர்தலை மனதில் கொண்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பஞ்சாயத்து, பஞ்சாயத்தாக செல்கிறார். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறாது. குட்கா, கோடநாடு என அ.தி.மு.க. மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி குளிர்காய்வதே தி.மு.க.வின் கொள்கையாகும்.

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஏன் செல்கிறார்..? நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, யார் ஆட்சிக்கு வந்தாலும் மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டுமென தி.மு.க. முயல்கிறது.

ஆடிட்டர் குருமூர்த்தி பா.ஜ.க. தமிழகத்தில் காலுன்ற அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டுமென கூறியிருப்பது கேலியாக உள்ளது. குருமூர்த்தி விளம்பரத்திற்காக பேசுகிறார். அ.தி.மு.க.வை மேலும் வளர்க்க நாங்கள் பாடுகிறோம். பா.ஜ.க.வை அவர்கள் வளர்க்கட்டும். பா.ஜ.க.வை சுமந்து செல்ல அ.தி.மு.க.வினர் பாவம் செய்திருக்கிறீர்களா..?, பா.ஜ.க.வை காலுன்ற வைக்க அதிமுகவினர் சுமந்து செல்ல மாட்டோம். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்ப அ.தி.மு.க. செயற்குழு கூடி முடிவெடுக்கும். அதை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்துவார்கள், இவ்வாறு கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...