அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ்-அப் குழுக்கள் அமைக்க டிஜிபி உத்தரவு

கோவை: தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ்- அப் குழுக்களை உருவாக்க தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை: தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ்- அப் குழுக்களை உருவாக்க தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக காவல்நிலையங்களுக்கு அவர் நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்க வேண்டும். அந்தக் குழுக்களின் அட்மின் ஆக, அந்தந்த காவல்நிலையத்தின் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் இருக்கலாம். அதில், காவல்நிலையங்களின் வரம்புக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் போலீஸாரின் பாராட்டத்தக்க நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் நடவடிக்கை குறித்த சிறு குறிப்புடன் பதிவிடலாம். 



காவல்நிலையங்களில் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுக்கள், அவற்றின் அட்மின், குழுவில் உள்ள போலீஸார் ஆகியவை குறித்த விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வெள்ளிக்கிழமை (ஜன.18) காலை 10 மணிக்குள் அனுப்ப வேண்டும், இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...