முதுமலையில் யானைகள் முகாமில் யானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் யானை பொங்கல் நிகழ்ச்சி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் யானை பொங்கல் நிகழ்ச்சி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

முதுமலையில் உள்ள யானைகள் முகாமில் 26 யானைகளை வனத்துறையினர் வளர்த்து வருகின்றனர். இவற்றிற்கு சாலையில் விழும் மரங்ளை அப்புறப்படுத்துவது, மேலும் வனங்களில் இருந்து வெளியேறும் யானைகளுக்கு பயிற்சி அளிப்பது, சுற்றுலாப் பயணிகளை சுமந்து கொண்டு வனத்தை சுற்றி காட்டுவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.



தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது, இந்த யானைகள் முகாமில் யானைப் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம், அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை நடைபெற்றது. இதில், யானைகளைக் குளிப்பாட்டி, அவற்றிற்குப் பிடித்த கரும்பு, பொங்கல், சுண்டல். உள்ளிட்டவற்றை வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது. மாலை 06.30 மணி அளவில் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பொங்கல் கொண்டாட்டம் 8 மணி வரை நடைபெற்றது.



இதைத் தொடர்ந்து, 26 யானைகளுக்கும், அதன் பாகன்கள் பொங்கலை கொடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில், முதுமலைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...