குன்னூர் அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தை குட்டி உயிருடன் மீட்பு

நீலகிரி : குன்னூர் அருகே உள்ள டால்பின்நோஸ் காட்சி முனை பகுதியில் கிணற்றில் விழுந்த சிறுத்தை குட்டி, வனத்துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது.

நீலகிரி : குன்னூர் அருகே உள்ள டால்பின்நோஸ் காட்சி முனை பகுதியில் கிணற்றில் விழுந்த சிறுத்தை குட்டி, வனத்துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது. 



குன்னூர் அருகே உள்ள டால்பின்நோஸ் காட்சி முனை பகுதியில் சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த நிலையில், இங்குள்ள முத்திரி எஸ்டேட்டில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் சிறுத்தை குட்டி ஒன்று தவறி விழுந்து, உயிருக்காக தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட எஸ்டேட் ஊழியர், வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். 

அதன்பேரில், குன்னூர் வனச்சரகர் பெரியசாமி தலைமையில் இப்பகுதிக்கு வந்த வனத்துறையினர், சுமார் 2 மணிநேர போராட்டத்திற்குப் பின் சிறுத்தை குட்டியை உயிருடன் மீட்டு அருகில் இருந்த வனப்பகுதியில் விட்டனர். குட்டியை தேடி தாய் சிறுத்தை வர வாய்ப்பிருப்பதால், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...