நீலகிரி : நீலகிரி மாவட்டத்தை உருவாக்கிய கோவை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் ஜான் சலீவனின் 164-வது நினைவு தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தை உருவாக்கிய கோவை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் ஜான் சலீவனின் 164-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
நீலகிரி மலைகள் மீது மக்கள் வாழ்கின்றனர் என்பதை அரசுக்குத் தெரிவித்து, அதன்பின் நீலகிரி மாவட்டத்தை கோவை மாவட்டத்துடன் இணைத்து, இவ்விரு மாவட்டத்திற்கு ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜான்சலீவன் நவீன நீலகிரி மாவட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்தார்.

இவரின் 164-வது நினைவு தினம் கண்னேரிமுக்கு கிராமத்தில் நடைபெற்றது. இதில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு ஆகியோர் கலந்து கொண்டு, அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், ஏராளமான பொதுமக்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு, ஜான் சலீவனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.