கோவை : கோவை விழாவின் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட பழங்காலத்தை அறியும் நிகழ்ச்சியில், சோழர்களின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை குறித்து விளக்கப்பட்டது.

கோவையின் சிறப்பை விளக்கும் வகையில் கோவை விழா கடந்த 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நாட்களில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், கோவை விழாவின் இறுதி நாளில், பட்டாம்பூச்சி மற்றும் பழங்காலத்தை பற்றியும் அறியும் பயண நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கோவையைச் சேர்ந்த பட்டாம்பூச்சி பாதுகாப்பு அறக்கட்டளைகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயணமானது, சிங்காநல்லூர் குளம் மற்றும் மதுக்கரை வனப்பகுதிக்குட்பட்ட ராஜகேசரி பெருவழி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டது.
20 பேர் கொண்ட குழுவினர், கிழக்கத்திய சிறிய நீலன், ஜோக்கர் உள்பட சுமார் 25 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் குறித்து கண்டறிந்து, தெரிந்து கொண்டனர்.

சுமார் 4 மணி நேரம் பட்டாம்பூச்சிகளின் இனங்களைப் பற்றிய நிகழ்ச்சிக்குப் பின்னர், அந்தக் குழுவினர் மதியத்திற்குப் பிறகு மதுக்கரை வனப்பகுதிக்குட்பட்ட ராஜகேசரி பெருவழி பழங்காலத்தை அறியும் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கோவைப்புதூர் அருகே உள்ள வன எல்லையில் 10-ம் நூற்றாண்டு காலத்திலான பாறையில் செதுக்கப்பட்ட கல்வெட்டு குறித்து விளக்கப்பட்டது. சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் இதுவும் ஒன்று என்பது தெரிய வந்துள்ளது.
"பழங்கால நினைவுகளை விளக்கும் வகையிலான இதுபோன்ற சான்றுகளை பார்ப்பது மிகவும் பெருமையளிப்பதாகவும், மகிழ்ச்சியளிப்பதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற இடங்கள் நமது பழங்காலத்தின் சிறப்புகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரைக்க உதவுகிறது," என்கிறார் மாணவர் ஜவஹர் ராமச்சந்திரன்.