வயநாடு அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டு வைத்து பிடிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரை ஒட்டிய கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 10 வயது பெண் புலி கூண்டில் சிக்கியது.

நீலகிரி: நீலகிரி  மாவட்டம் கூடலூரை ஒட்டிய கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 10 வயது பெண் புலி கூண்டில் சிக்கியது.

நீலகிரி மாவட்டம் 55 சதவீத வனப்பகுதிகளை கொண்டது. இங்கு புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் உள்ள விலங்குகள் அவ்வப்போது, உணவு தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி, குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் உலா வருவது வழக்கம். 

கடந்த சில வாரங்களாக கூடலூரை ஒட்டியுள்ள கேரள மாநில வயநாடு மாவட்டம் பத்தேரி, தேட்டமூலா பகுதி குடியிருப்பு பகுதிகளுக்குள் புலி ஒன்று புகுந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக வனத்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புலியைப் பிடிப்பதற்காக அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூண்டு வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்தக் கூண்டில் புலி சிக்கியது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் நிம்மதியடைந்தனர். 



இது குறித்து வனத்துறையினர் கூறும்போது :- பொருத்தப்பட்ட கூண்டில் 10 வயது மதிக்கத்தக்க பெண்புலி சிக்கியுள்ளது. இதனை பரிசோதித்த பின் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...