கோவை : நமது பாரம்பரிய பண்டிகையான பொங்கலை, கனடாவாழ் தமிழர்களுடன் பாரம்பரிய உடை அணிந்து கொண்டாடிய கனடா பிரதமரின் செயல் உலகத் தமிழர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடுவாழ் தமிழர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரும்பாலும், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள், நமது பாரம்பரிய பண்டிகைகளை ஒன்று கூடி கொண்டாடுவதற்காகவும், தமிழ் மொழியின் சிறப்பை வெளிக் கொண்டு வருவதற்காகவும் தமிழ்ச் சங்கங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கனடாவில் அதிகம் வாழும் தமிழக மக்கள் நேற்று பாரம்பரிய பண்டிகையான பொங்கலைக் கொண்டாடினர். மர்க்கமில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அந்நாட்டு பிரதமர் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார். விழாவின் போது பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்த அவர், அனைவருக்கும் கைகளை குலுக்கியும், கட்டியணைத்தும் தமிழில் தனது பொங்கல் வாழ்த்துக்களை கூறிக் கொண்டார். பின்னர், பானையில் தன் கைகளால் அரிசியை அள்ளியிட்டு, பொங்கலிட்டு தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடினார்.
முன்னதாக, அவர் வீடியோ மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்குப் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதில், அவர் பேசியதாவது :- அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். இந்த மாதத்தைக் கனடாவில் தமிழ்ப் பாரம்பரிய மாதமாக கொண்டாடுவதில் மிக்கமகிழ்ச்சி. கனடாவின் வெற்றிக்கும் அதுதான் காரணம். உலகின் பல கலாச்சாரங்களை வரவேற்று, அதிலிருந்து புதிய விஷயங்களைக் கற்று அதைக் கொண்டாட வேண்டும். 2019-ம் ஆண்டில் பொங்கலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
அதாவது, இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து 10 ஆண்டுகள் ஆகிறது. அதில் பெற்ற காயங்கள், கொடுத்த உயிர்கள் ஏராளம். கனடா வன்முறை மற்றும் அடக்குமுறைக்கு எதிராக இருக்கும். அந்தப் போரின் தாக்கத்திலிருந்து இலங்கை விரைவில் முன்னேற வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசையும். அனைவருக்கும் மீண்டும் தை பொங்கல் நல்வாழ்த்துகள்” என்றார்.
இந்த வீடியோக்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கனடா பிரதமரின் இந்த அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழ் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.