நீலகிரியில் உறைபனியால் கருகும் தேயிலை கொழுந்துகள் : தாகைகளை விரித்து பாதுகாக்கும் விவசாயிகள்

நீலகிரி : தேயிலை பயிர்களின் கொழுந்துகள் உறைபனியால் கருகுவதைத் தடுக்கும் வகையில், தேயிலை செடிகள் மீது எடை குறைவான தாகைகளை விரித்து விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.


நீலகிரி : தேயிலை பயிர்களின் கொழுந்துகள் உறைபனியால் கருகுவதைத் தடுக்கும் வகையில், தேயிலை செடிகள் மீது எடை குறைவான தாகைகளை விரித்து விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். 



நீலகிரி மாவட்டத்தில் கடுமையான உறைபனி தொடர்ந்து நிலவி வருவதால், தேயிலை செடிகளின் கொழுந்துகள் கருகி தேயிலை விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குன்னூர் அருகேயுள்ள கேத்தி, பாலடா, காட்டேரி வில்லேஜ், கொல்லிமலை, கரும்பாலம், கிளிஞ்சடா, தூதூர்மட்டம் சேலாஸ் உள்ளிட்ட பகுதியில் உறைபனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.

பகலில் கடும் வெயிலும், மாலை முதல் குளிர் காற்றும், அதிகாலையில் கடுமையான பனிப்பொழிவு என சீதோசன மாறியுள்ளதால், பொதுமக்கள் மட்டுமில்லாது விவசாயிகளும் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால், உறைபனியில் இருந்து தேயிலை தோட்டப் பயிர்களை பாதுகாக்கும் வகையில், எடை குறைவான தாகைகளை செடியின் மீது பரப்பி விட்டு, தேயிலை செடிகளை பாதுகாத்து வருகின்றனர். வரும் நாட்களில் உறைபனி பொழிவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தேயிலை செடிகள் அதிகளவில் கருகி, அதன் மகசூலும் வெகுவாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



ஏற்கனவே, பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் பாதித்து வரும் தேயிலை விவசாயிகளுக்கு, இந்த சீதோஷன நிலை மாற்றத்தால் தேயிலை செடிகள் கருகி வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...