பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார் கமல்

கோவை : கோடநாடு சம்பவம் துரோகத்தின் சின்னமாக மாறி இருப்பதாக பொள்ளாச்சியில் புதிய கட்சி அலுவலகம் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.


கோவை : கோடநாடு சம்பவம் துரோகத்தின் சின்னமாக மாறி இருப்பதாக பொள்ளாச்சியில் புதிய கட்சி அலுவலகம் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். 



கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கோடநாடு விவகாரத்தை ஆராய வேண்டியது அதிகாரிகளின் கடமை. கோடநாடு துரோகத்தின் சின்னமாக மாறி இருக்கின்றது. மக்களுக்கும், அவர்கள் தமக்கே இழைத்துக் கொண்ட துரோகத்திற்கும் சான்றாக இது இருக்கின்றது. 



கட்சி தொண்டர்களை நோக்கி நகர வேண்டும் என்பதற்காக நான்கு திசைகளிலும் கட்சி அலுவலகம் திறக்கப்படுகின்றது. தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். கொள்கைக்கும், திட்டத்திற்கும் இடையே இங்கு முரண்பாடு இருக்கின்றது. திட்டங்களை மாற்றும் போது கொள்கை மாறிவிட்டதாக கூறக் கூடாது.



நீர்நிலை ஆதாரங்களையும், பெண்களின் ஆரோக்கியம், விவசாயிகள் பிரச்சினை, கல்வி போன்ற பிரச்சினைகள் குறித்து வல்லுநர்களுடன் ஆலோசிக்க வேண்டும். ஆதார கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டும். அரசு இலவசமாக கொடுக்கும் கல்வியில், ஆதார வசதிகள் கூட இல்லாமல் இருக்கின்றது. நாடாளுமன்ற தேர்தலில் ஊழலற்ற, ஒருமித்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும். 



இடஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டதற்கான காரணம் நீங்கிய பின்னர், உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு குறித்து யோசிக்கலாம். இன்னும் அந்த காரணம் நீங்கவில்லை. இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு எந்தவிதமாகக் கொடுக்கலாம். இருக்கும் ஒதுக்கீட்டில் கைவைக்கக் கூடாது. இடஒதுக்கீடு இன்னும் அனைத்து இடங்களிலும் சென்றடையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. தேர்தலுக்காக ஆளும் கட்சியின் மீது குற்றம்சாட்டவில்லை. பல ஆண்டுகளாக இருந்ததை மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நடிப்பு எனது தொழில், அரசியல் எனது கடமை, என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...