அனன்யாஸ் நானா நானி பில்டர்ஸ் சார்பில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

கோவை : பொங்கல் பண்டிகையை அனன்யாஸ் நானா நானி பில்டர்ஸ் நிறுவனம், தனது வாடிக்கையாளர்கள் மற்றும் குடியிருப்புவாசிகளுடன் இணைந்து பாரம்பரிய முறையில் கொண்டாடியது.


கோவை : பொங்கல் பண்டிகையை அனன்யாஸ் நானா நானி பில்டர்ஸ் நிறுவனம், தனது வாடிக்கையாளர்கள் மற்றும் குடியிருப்புவாசிகளுடன் இணைந்து பாரம்பரிய முறையில் கொண்டாடியது. 



தை திருநாள், பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்தத் திருநாளில், தமிழர்களின் அனைத்து வீடுகளின் வாசல்களில் கலர் கோலமிட்டும், கரும்புகளை வைத்து பொங்கலிட்டு, கடவுளுக்குப் படைத்து வழிபாடு நடத்துகின்றனர். அதோடு, தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. 



இந்த நிலையில், கோவையில் பிரபலமான நானா நானி பில்டர்ஸ் நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்கள் அல்லது தங்களது குடியிருப்பில் வசித்து வருபவர்களுடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டதாக நானா நானி பில்டர்ஸ் நிறுவனத்தினர் கூறுகின்றனர். 

வண்ண வண்ணமான கொடிகள், பாரம்பரிய மற்றும் பழங்கால உணவு வகைகள் என களைகட்டிய இந்தப் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம், தமிழ் கலாச்சார நடனமான பரை ஆட்டத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, உறியடித்தல், மல்லிகைப் பூ கோர்த்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், பெண்கள், ஆண்கள் என அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 



"ஒவ்வொரு ஆண்டும் எங்களது வாடிக்கையாளர்கள் அல்லது எங்களது குடியிருப்பில் வசிப்பவர்களுக்காக பொங்கல் பண்டிகை சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். ஆனால், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், இந்த ஆண்டு கொண்டாட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது," என்கிறார் உமா யுவராஜ், நானா நானி பில்டர்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர். 



இந்த நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டம் நிறைவடைந்தது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...