நீலகிரி : குளுகுளு காலநிலை மற்றும் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறைக் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது குளுகுளு காலநிலை நிலவி வருகிறது. இந்த சூழலில், பொங்கல் விடுமுறையை இந்த காலநிலையுடன் கொண்டாடி மகிழ தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமில்லாது கேரளா, கர்நாடக மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அதிகளவில் வர தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக, உதகையில் உள்ள படகு இல்லம், தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா, குன்னூரில் உள்ள டால்பின் நோஸ், லேம்ஸ்ராக், சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக, தட்பவெப்ப நிலையும் நிலவி வருகிறது. அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவும், பகல்நேரங்களில் சில்லென்று இதமான காற்றும் வீசுகிறது. இந்த காலநிலையினையை சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றனர்.