கோவை : கோவையில் நடைபெற்ற எச்.எஸ்.பி.சி. பறவைகள் பந்தய நிகழ்ச்சியின் போது, இதுவரை மாவட்டத்திற்கு வருகை தந்திராத அரிய வகை பறவைகளை பார்வையாளர்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

எச்.எஸ்.பி.சி. வங்கியின் சார்பில் பறவைகளைக் கண்டு, அதன் புள்ளிவிவரங்களை சேகரிக்கும் பறவைகள் பந்தய நிகழ்ச்சிகள் பெருநகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஆர்வம் இருந்தாலே போதும். பறவைகள் பந்தய நிகழ்ச்சியில், பறவைகள் வல்லுநர் தலைமையில் 4 பேர் அடங்கிய குழு குழுக்களாகப் பிரிக்கப்படுவர். நகரில் எந்தப் பகுதியில், பறவைகளின் புள்ளிவிவரங்களை சேகரிக்கலாம் என பறவைகள் பார்வையாளர்களே தேர்வு செய்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சி நடைபெறும் ஒவ்வொரு நாட்களின், இரவில் அனைவரும் ஒருங்கிணைந்து, சேகரிக்கப்பட்ட பறவைகளின் புள்ளிவிவரங்களைப் பற்றியும், பறவைகளின் இனங்கள் குறித்தும் விவாதிக்கின்றனர்.

இந்த நிலையில், பறவை இனங்களைப் பற்றி தெரிந்து கொள்ள பறவை ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சிறந்த ஸ்தலமாக இருக்கும் எச்.எஸ்.பி.சி. பறவைகள் பந்தய நிகழ்ச்சி, சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்துடன் இணைந்து கோவையில் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை நடக்கவிருக்கிறது. இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை நேட்சர் சொசைட்டியில் இருந்து 5 அணிகள் உள்பட மொத்தம் 25 அணிகள் பங்கேற்றன.

அதில், எஸ்.பி. பாலாஜி தலைமையில் பாவேந்தன், சதிஷ் சேனையன், சுல்தானா.என், சவுந்தரராஜ் ஆகியோர் அடங்கிய மோனார்ச் என்ற குழு, பாப்பம்பட்டியை அடுத்த பள்ளபாளையம் கிராமத்தில் இருக்கும் பள்ளபாளையம் குளம் சதுப்பு நிலங்களில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, அரிய வகை இன பறவைகளான வெண்கழுத்து நாரை, கருநாரை போன்றவற்றை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். கோவை மாவட்டத்திற்கு வந்துள்ள பறவைகளின் புள்ளிவிவரங்களில் இதுவரை இடம்பெறாத நிலையில், முதல்முறையாக இந்தப் பறவைகளை பார்த்துள்ளதாக மோனார்ச் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, பச்சை கால்கொசு உள்ளான், கருவால் மூக்கான், பேதை உள்ளான், நாம தலை வாத்து, ஊசிவால் வாத்து, நீலச்சிறகு, ஊசிவால் வாத்து உள்ளிட்ட அரிய வகை பறவைகளையும் அவர்கள் பார்த்து ரசித்தனர்.