நீலகிரியில் காட்டெருமை தாக்கியதில் ஒருவர் படுகாயம்

நீலகிரி : மஞ்சூர் அருகே உள்ள கைகாட்டிப் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தனியார் நிறுவன ஊழியர் படுகாயம் அடைந்தார்.


நீலகிரி : மஞ்சூர் அருகே உள்ள கைகாட்டிப் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தனியார் நிறுவன ஊழியர் படுகாயம் அடைந்தார்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் வசித்து வருபவர் ரெஜினிஸ் வயது (40). இவர் வேலை நிமித்தமாக குன்னூர் வந்து, பின்னர் மீண்டும் மஞ்சூர் சென்று கொண்டிருந்தார். அப்போது கைகாட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் தேயிலைச் செடி மறைவில் இருந்த காட்டெருமை ரெஜினிஸை பலமாகத் தாக்கியுள்ளது. 

இதில், பலத்த காயமடைந்த ரெஜினிஸ் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டுள்ளனர். இதையடுத்து, அவர் அருகே உள்ள சாம்ராஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழலின் காரணமாக, உதகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள், இங்கு சுற்றித்திரியும் ஒற்றைக் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் துரத்தவேண்டும், என கோரிக்கை விடுத்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...