பொதுமக்களின் நலனுக்காக கேரளாவில் 28 சாலை மற்றும் பாலங்களின் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேரள அரசு, எர்ணாகுளத்தில் இருக்கும் கும்பளம் சுங்கச் சாவடி மற்றும் பளிக்காரா சுங்கச் சாவடிகளில் வாகனங்களில் பயணிப்போர் சுங்கக்கட்டணத்தால் கடும் அதிருப்தி அடைந்துள்ளதை அடுத்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.
குறைந்த தூர பயணங்களுக்கும் வாகன ஓட்டிகள் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் பணம் செலுத்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதை கணக்கில் கொண்ட கேரள அரசு 28 சாலைகளில் வசூலிக்கப்பட்ட சுங்கச்சாவடி கட்டண த்தை ரத்து செய்து மக்களை நிம்மதி பெருமூச்செறிய வைத்துள்ளது.
இது குறித்து பொதுத்துறை அமைச்சர் ஜி.சுதாகரன் கூறும் போது, சாலைகளுக்கும், பாலங்களுக்கும் டோல்கேட் அவசியமில்லை. பினராயி விஜயன் அரசு 28 சாவடிகளுக்கான சுங்க கட்டணத்தை நிறுத்தியுள்ளது. இன்னும் 10 சாவடிகள் மட்டுமே, சாலை அமைத்ததற்கான செலவை ஈடுகட்ட காத்திருக்கிறது. அந்த கடனை அரசு செலுத்திய பின் வாகன ஓட்டிகளிடமிருந்து சேவைக்கட்டணம் வசூலிப்பது முற்றிலுமாக நிறுத்தப்படும், என்றார்.
கேரளாவின், சுங்கச்சாவடி சட்டத்தின் படி, மாநிலத்தின் பொதுபணித்துறை, பாலம் மற்றும் சாலை அமைத்ததிற்கான செலவு 10 கோடிக்கு மேல் இருந்தால் அதனை ஈடுகட்ட சுங்கச் சாவடி கட்டணத்தை அம்மாநில அரசே வசூல் செய்யும். இந்நிலையில், அதன் படி 14 சுங்கச்சாவடிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் ஒருபகுதியாக, 2016 -ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த சட்டத்தின் கீழ் 6 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள 14 பாலங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டுவந்தது.
இந்நிலையில், சாலைகள் மற்றும் பாலங்களுக்கான அமைப்பு சுங்கக் கட்டணங்களை வசூல் செய்து, அதன்மூலம் பாலங்கள் கட்டுவதற்கு ஆன கடனை திரும்பச் செலுத்திவந்தன. தற்போது கேரளா அரசு அதற்கான பணத்தை செலுத்தவிரும்புகிறது. கேரள அரசின் சுங்கச் சாவடி இல்லா சாலை மற்றும் பாலங்கள் கொள்கையின்படி, 2016-ம் ஆண்டிலேயே, இரும்பனம் - திரும்புனுதுரா, பொன்னுருதி - அதானி பாலம், ஏர்போர்ட் - சீபோர்ட் சாலை உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் பணம் வாங்குவதைக் கேரள அரசு நிறுத்தியிருந்தது.
இதுதொடர்பான பொதுப்பணித்துறை அறிக்கையில் கூறியிருந்ததாவது :- 24 பாலங்களில் சுங்கக் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்தியது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு. இந்த பாலங்களை கட்டியதற்கான கட்டுமானச் செலவு ரூ1,000 கோடிக்கும் அதிகமாகும். கும்பளம் சுங்கச் சாவடி மற்றும் பளிக்காரா சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டுள்ளது. குடிமக்களின் மீது சுமையை செலுவத்துவது சரியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.